Breaking
Sat. Jan 11th, 2025
– அபூ உமர் அன்வாரி BA
இஸ்லாத்தில் ஐம்பெரும் கடமைகளில் நோன்பு முக்கியமான ஒன்று.இதில் அல்லாஹ் தனது அடியார்களுக்கு  பல சிறப்பம்சங்களை தயார்படுத்தி வைத்துள்ளான். நன்மை செய்வதற்கான பல விடயங்களையும் எமக்கு நபிவழியின் மூலம் காணபித்துள்ளான்.ஆகவே ஒவ்வொரு விசுவாசியும் இதை நல்ல முறையில் பயன் படுத்துவதற்கான ஆயத்தங்களை இப்போதிலிருந்து செய்யவேண்டும்.இதற்கென வீடுகளை சுத்தம் செய்து தூசிபடிந்த  குர்ஆனை துடைப்பதும் மாத்திரம் அல்ல.மாறாக  எத்தகைய  நல்ல செயற்பாடுகளை செய்தால் இந்த  புனித மிகு ரமழானை பயனுடையதாக அமைத்து கொள்ள முடியும் என திட்டமிடலும். எத்தகைய  அம்சங்கள் வணக்கத்தை பால்படுத்திவிடும் என இனம்கண்டு அதை கலைதலும் காலத்தின் தேவை.
இன்றைய இயந்திர வாழ்வில் அதிகளவு நேரம் இலத்திரனியல் உபகரணங்களுடன் கழிகின்றன.சனத்தொகையில் அதிகளவானவர்களிடம் கையடக்கத் தொலைப்பேசி உலாவருகின்றது.இதை பயன்படுத்துவது இஸ்லாமிய அடிப்படை அம்சஙகளுக்கு தடையாக  அமையுமாயின் அது பாவம் என கொள்ள முடியும்.இத்தகைய  தொலைபேசிகள் அதிகளவான நேரத்தினை வீணாண முறையில் கழிக்கச்செய்கின்றன.படைத்த இறைவனை மறந்தாலும் வாட்சாப்,டென்கோ, பேஸ்புக்…..என பட்டியல் நீண்டு செல்கின்றது.இவற்றில் வெளியாகும் தகவல்களை பார்க்க படிக்க மறப்பதில்லை.இவ்வாறான நிலை மாறி இத்தகைய உறவினர்,நண்பர் ஆகியவர்களுக்கு விடுமுறைக்கொடுத்து விட்டு .அல்லாஹவின் அருள்களையும் சம்மானங்களையும் சும்ந்து வரும் கண்ணியமிகு விருந்தாளியை வரவேற்பதற்கான ஆயத்தங்கள் செய்யப்படல்  வேண்டும்.
வியாபாரிகள் மலிவு விற்பனை என கூச்சலிட்டு அவர்கள் தமது வியாபாரங்களை ஆரம்பிக்கும் நிலையில் உண்மை விசுவாசிகள் இதில் மதிமயங்கி அல்லாஹ்வின் மிகப்பெரிய இலாபங்களை விற்றுவிடாது தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். புனித  மிகு ரமழானை கடைவீதிகளில் கழிக்காது அல்லாஹ்வின் மாலிகைகளில் கழிப்பதற்கான நிகழ்ச்சி நிரல்களை தயாரித்தால்.நிச்சயம் சுவர்க்கத்தின் மாளிகைகள் சொந்தமாகிவிடும்.நபிகளார் (ஸல்) அவர்கள்  குறிப்பிடும் போது சுவனத்தில் ரய்யான் என ஒரு வாயில் உள்ளது, அதில் நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய முடியாது.இதில் அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாசல் மூடப்பட்டுவிடும்.(நூல் புகாரி).இன்னும் இத்தகைய மாதம் எம்மை அடைய  இன்னும் எண்ணிய  சில  நாட்கள் உள்ளன.

ஆகவே இதற்கான உரிய  ஆயத்தஙகளை செய்து அல்லாஹ்வின் கருணைய அடைந்த  ஒரு சமூகமாக மாற அல்லாஹ் துணை புரியட்டும்.

By

Related Post