Breaking
Fri. Nov 15th, 2024

அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா  ஜப்­பானின் ஹிரோ­ஷிமா நக­ருக்கு இம்­ மாதம் இறு­தியில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொள்­ள­வுள்ளார்.

அமெரிக்காவின் அணு­குண்டால் பாதிக்­கப்­பட்ட ஹிரோ­ஷிமா நகருக்கு இதுவரை அமெ­ரிக்க ஜனா­தி­பதிகள் யாரும் செல்லவில்லை.

இந்­நி­லையில் இம்­மாதம்  27ஆம் திகதி ஜி-7 உச்சி மாநாட்­டுக்­காக ஜப்பான் செல்­ல­வுள்ள அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா, ஹிரோ­ஷிமா நக­ரத்­துக்கும் செல்லவுள்ளார்.

பத­வியில் இருக்கும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒருவர் அந் ­ந­க­ரத்­துக்கு செல்­வது இதுவே முதல்முறை என்­பதால், அவ­ரது இந்த சுற்­றுப்
ப­யணம் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக அமையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

எனினும் அமெ­ரிக்கா அணுகுண்டு தாக்­குதல் நடத்­தி­ய­தற்­காக மன்­னிப்பு கோர முடி­யாது என்றும் அவர் கூறி­யுள்ளார்.

1945ஆம் ஆண்டு இரண்டாம் உல­க­ப்போரின் போது, ஜப்­பானின் ஹிரோ­ஷிமா, நாக­ஷாகி ஆகிய நக­ரங்கள் மீது அமெ­ரிக்கா சக்தி வாய்ந்த அணு­குண்டுகளை வீசி­யது.  இவற்றில்  இலட்­சக்கணக் கானோர் கொல்­லப்­பட்­டனர்.

சர்­வ­தேச ரீதியில், அணு ஆயுதப் பர­வலைத் தடுக்க பாடு­பட்­ட­மைக்­கா­கவும், சர்­வ­தேச நாடு­க­ளி­டையே நல்­லெண்­ணத்தை உரு­வாக்கப் பாடு­பட்­ட­மைக்­கா­கவும் ஒபா­மா­வுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டமை குறிப்­பி­டத்­தக்­க­து.

By

Related Post