Breaking
Mon. Dec 23rd, 2024

– பரீல் –

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யினால் அங்­கீ­காரம் பெற்­றுள்ள ‘தப்லீக் ஜமாஅத்’ ஒரு அடிப்­ப­டை­வாத குழு என பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கருத்து வெளி­யிட்­டுள்­ள­மைக்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கண்­டனம் தெரி­வித்­துள்­ளது.
‘தப்லீக் ஜமாஅத்’ மக்­க­ளி­டையே நற்­பண்­பு­க­ளையும் சகோ­த­ரத்­து­வத்­தை­யுமே போதித்து வரு­கி­றது. மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தே­யன்றி அடிப்­ப­டை­வா­தத்தைப் போதிக்­க­வில்லை என  அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச்­செ­ய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் தெரி­வித்தார்.
பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உலமா சபை ‘தப்லீக் நிகாயா’ என்றோர் பிரிவை உரு­வாக்­கி­யுள்­ள­தா­கவும் இப்­பி­ரிவு நகரப் பகு­தியில் காணி­களை கைய­கப்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் இப்­பி­ரிவு அடிப்­ப­டை­வாத செயற்­பா­டு­களைக் கொண்­டுள்­ளது என்ற கருத்­துப்­ப­டவும் பேசி­யி­ருந்தார்.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யிடம் கருத்து வின­வு­கை­யி­லேயே அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,
அரபு நாடு­க­ளி­லி­ருந்து இந் நாட்­டுக்கு கிடைக்கும் நிதி­யு­த­வி­யினால் வைத்­தி­ய­சா­லை­களும் பாலங்­களும் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன. மற்றும் பல அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளுக்கு செல­வி­டப்­பட்­டுள்­ளன. ‘தப்லீக் பிரிவு’ வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து நிதி­யு­த­வி­களைப் பெற்றுக் கொள்­வ­தில்லை.
மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தற்­காக  இப் புனிதப் பணியில் ஈடு­ப­டு­ப­வர்கள் தமது சொந்தப் பணத்­தையே செலவு செய்­கி­றார்கள்.
சவூதி அரே­பியா, குவைத், கட்டார், ஈரான் போன்ற நாடுகள் முஸ்­லிம்­க­ளுக்­கென்று நிதி­யு­த­வி­களை வழங்­கு­வ­தில்லை. நாட்டின் அபி­வி­ருத்­திக்­கென்றே வழங்கி வரு­கின்­றன. பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரரின் இவ்­வா­றான கருத்­துக்கள் மீண்டும் இனங்­களின் உற­வு­க­ளுக்­கி­டையில் விரி­சலை உரு­வாக்கும் வகையில் அமைந்­துள்­ளன.
உலமா சபை ஞானசார தேரரின் குற்றச்சாட்டுக்களை முழுமையாக மறுக்கிறது. சமயக் கோட்பாடுகளை முன்னிறுத்தி மக்களை நல்வழிப்படுத்தும் செயற்றிட்டங்களை ஒரு போதும் அடிப்படைவாதம் என முத்திரை குத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

By

Related Post