அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட பல மாதங்களுக்கு முன் பிரச்சாரத்தை தொடங்கிய டொனால்டு டிரம்ப் முஸ்லிம்களுக்கு எதிரான தனது சர்ச்சைக்குரிய பேச்சு மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டும் வருகிறார்.
அந்த வகையில் அமெரிக்காவிற்கு நேரடியாக சவால்விட்டு வரும் வடகொரியாவுடன் பேச்சு நடத்துவேன் என்று தெரிவித்துள்ளார். வடகொரியாவுடன் அமெரிக்காவின் உறவு குறித்து டிரம்பிடம் கேள்வி எழுப்பிய போது “நான் அவருடன் பேசுவேன்(கிம் ஜோங்). அவருடன் பேசுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.” என்று தெரிவித்தார்.
அதேபோல் சீனாவுடன் பிரச்சனைகளை ஒரே ஒரு போன் காலில் தீர்த்துவிடுவேன் என்றும், அமெரிக்கா சீனாவை விட பொருளாதாரத்தில் வலுவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.