Breaking
Mon. Dec 23rd, 2024

இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானில் சென்று இலவசமாக படிப்பதற்கு புலமைப்பரிசில் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

குறித்த விண்ணப்பங்கள் 2016ஆம் ஆண்டுக்காக கோரப்பட்டுள்ளன.

க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் கொழும்பிலுள்ள தனது உயர் ஸ்தானிகராலயத்தின் மூலம் இந்தப் புலமைப் பரிசில்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் இந்தப் புலமைப் பரிசிலைப் பெற்று அந்த நாட்டில் சுமார் 1300 இற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர்.

கடந்த 11 வருட காலப்பகுதியில் இந்த மாணவர்களின் படிப்புக்காக மாத்திரம் பாகிஸ்தான் அரசு 43 மில்லியன் ரூபாயை செலவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post