Breaking
Sat. Sep 21st, 2024

சீரற்ற காலநிலை காரணமாக  அதிகரித்திருந்த  களனி கங்கையின் நீர் மட்டமானது, தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாகலகம்வதிய மாபாங்கய பகுதியில் 7.5 அடிக்கு இருந்த நீர்மட்டமானது தற்போது 5.6 ஆக குறைவடைந்துள்ளதாக  நீர்ப்பாசன திணைக்களத்தின் செயலாளர் ஆர்.எம்.ரத்னாயக்க தெரிவித்தார்.

நீர்மட்டமானது 5 அடிக்கு குறைவடையும்போதே வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் ஆறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் வெள்ளநீர் முற்றாக வழிந்தோட ஒருவாரம் எடுக்குமெனவும் அவர் மேலும் கூறினார்.

By

Related Post