Breaking
Mon. Dec 23rd, 2024

கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் இன்றும் நாளையும் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்போது வீட்டின் குடியிருப்பாளர்கள் தத்தமது வீடுகளில் தங்கியிருப்பதுடன், இழப்புகள் குறித்த சரியான விபரங்களை கணக்கெடுப்பாளர்களிடம் வழங்குமாறும் கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன்போது சேகரிக்கப்படும் விபரங்களைக்கொண்டே வீடுகளுக்கான இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளது.

எனினும் கொலன்னாவை , வெல்லம்பிட்டிய பிரதேசங்களில் இராணுவத்தினர் இன்று சுத்திகரிப்பு பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இதனை முன்னிட்டு எந்தவொரு குடியிருப்பாளரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படவில்லை.

இதன் காரணமாக அவர்களுக்குத் தங்களின் உண்மையான இழப்புகள் குறித்த விபரங்களை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்று கருதப்படுகின்றது.

By

Related Post