இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களுக்கு பல உலக நாடுகள் நிவாரணங்களை வழங்கி வருகின்றன. மேலும் பல நாடுகள் நிவாரணங்களை வழங்க முன்வந்துள்ளன.
இந்த நிலையில் துருக்கியின் செஞ்சிலுவை சங்கம் அவசர உதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் கோரிக்கைக்கு அமையவே இந்த நிவாரண உதவிகளை வழங்க துருக்கி அரசாங்கமும் முன்வந்துள்ளது.
துருக்கியின் மனிதாபிமான அமைப்பாக திகழும் செஞ்சிலுவைச் சங்கமானது இலங்கைக்கு கூடாரங்கள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் துருக்கியின் இந்த உதவிக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரயதர்சன யாப்பா நன்றி தெரிவித்துள்ளார்.
2004ம் ஆண்டு இலங்கையில் சுனாமி ஏற்பட்ட சமயத்தில், துருக்கியின் செஞ்சிலுவைச் சங்கமானது 250 வீடுகளை நிர்மாணித்து கொடுத்துள்ளமையை அமைச்சர் இதன்போது நினைவு கூர்ந்தார்.