-நாச்சியாதீவு பர்வீன்-
பாதுகாப்பற்ற உடைந்த படகில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மள்வானை காந்திவளவ மற்றும் ஆட்டா மாவத்தை மக்களை சந்தித்து அந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார் கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுத்தீன்.
கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலையினாலும்,தொடர்மழையினாலும் வெகுவாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மல்வானையும் அடங்கும் மல்வானையில் ரக்ஷபான,காந்திவளவ,ஆட்டா மாவத்தை,சக்கீனாபுர போன்ற பிரதேசங்கள் முற்றாக நீரினால் சூழப்பட்டிருந்தது.அதிலும் சக்கீனாபுர மற்றும் ஆட்டா மாவத்தை போன்ற பிரதேசங்கள் நூறு விகிதம் வெள்ளத்தினால் மூழ்கிய பிரதேசமாகும்.
இந்தப்பிரதேசத்திற்கு எந்த ஒரு அரசியல் தலைமைகளும் வந்து இங்கு வெள்ளத்தினால் பாதிக்கப்படுள்ள மக்களைப்பார்வையிடவோ,அல்லது அவர்களுக்கு உதவி செய்யவோ இல்லை. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 22 ஆம் திகதி மல்வானைப் பிரதேசத்திற்கு வருகை தந்த அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் குழுவினர் ரக்சபான,உலகிட்டிவல மற்றும் சில பிரதேசங்களையும் மல்வானையில் பார்வையிட்டனர். இருந்தும் அன்றைய தினம் அமைச்சரினால் நீரினால் முற்றாக மூழ்கிய மல்வான ஆட்டா மாவத்தை பிரதேசத்தை பார்க்கக்கிடைக்கவில்லை.
எனவே அந்த பிரதேசத்தை பார்க்கும் நோக்கிலும், அந்தப்பிரதேசத்தில் நீரினால் முற்றாக தமது வீடுகளை இழந்து அகதிகளாக வாழுகின்ற ஊடகவியலாளர்களான சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீர் ஹம்சா மற்றும் நாச்சியாதீவு பர்வீன் ஆகியோரை பார்க்கும் நோக்கிலும் 23ஆம் திகதி திங்களன்று மாலையும் மீண்டும் மல்வானைக்கு வந்தது அமைச்சர் ரிசாட் குழுவினர். இரவு எட்டு மணி மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு நெஞ்சளவு தண்ணீர் இருக்கின்ற போது,பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில் காந்திவளவ பிரதேசத்திற்கு எப்படியும் போயாக,அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களை காணவேண்டும் என அமைச்சர் ரிசாட் துடித்தார்.
அவரோடு வந்திருந்தவர்கள் மற்றும் அமைச்சரின் பாதுகாப்புத்தரப்பினர் இன்னும் அங்கிருந்த சிலரும் இந்த நேரத்தில் உடைந்த படகிலே செல்வது பாதுகாப்பு உத்தரவாதமில்லை என்றனர். என்ன செய்வோம் பர்வீன் என அமைச்சர் என்னிடமும் கேட்டார் இல்லை சேர் அங்கு போகத்தேவையில்லை அது பாதுகாப்பு இல்லை, இவ்வளவு தூரம் நீங்கள் வந்தது பெரிய விடயம் என்றேன்.
எனது பாதுகாப்பை அல்லாஹ் பார்த்துக்கொள்வான் வாருங்கள் போகலாம் என்றார். உடைந்த படகில் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன்,முன்னாள் பிரதியமைச்சர் ஹூசைன் பைலா, SSP மஜீத் உற்பட சிலர் ஏறிக்கொண்டனர். இன்னுமொரு தோணியில் அமைச்சரின் ஊடக செயலாளர்,சிரேஷ்ட ஊடகவியலாளர் சுகைப்.எம்.காசிம் மற்றும்,நாச்சியாதீவு பர்வீன்,அமைச்சரின் ஊடகப்பிரிவைச்சேர்ந்த பர்வீஸ் இன்னுமொருவர என நான்கு பேர் ஏறிக்கொள்ள தோணியின் இருமருங்கிலும் துடுப்பு வழித்தவர்கள் சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீர் ஹம்சா மற்றும் சகோதரர் ஜிப்ரி.அப்போது மழையும் மெல்லியதாக தூர ஆரம்பித்திருந்தது அமைச்சரை பார்க்கும் போது கவலையாக இருந்தது இந்த இரவு நேரத்தில் மழையில் நனைந்தபடி வெள்ள நீரினால் சூழப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் வாழுகின்ற மக்களைப்பார்க்க அவர் எடுக்கின்ற கரிசனை விமர்சனங்களைக் கடந்த மனிதபிமான செயலாகும்.
இருட்டில் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத அந்த நீர்பரப்பில் சுமார் 15 நிமிட பயணம் திகில் நிறைந்தது.கண் வெளிச்சம் இருக்கும் போதே இந்த வெள்ளத்தில் படகுகளை செலுத்துவது கடினமான விடயமாகும். அப்படியிருந்தும் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் அவர்களின் துணிச்சல் மிக்க செயற்பாட்டை நான் கண்டு வியந்தேன். கடும் இருட்டில் சின்ன டோர்ச் லைட் மற்றும் மொபைல் வெளிச்சத்தில் படகு செறிவான இருளை ஊடறுத்து நகர்ந்தது. இடையிடையே அமைச்சர் பயணித்த படகினை நீரில் இறங்கி தள்ளவேண்டி இருந்தது அந்த வேலையை சகோதரர் ஜிப்ரி கச்சிதமாக மேற்கொண்டார். ஒருவாறு காந்திவளவ பிரதேசத்தை அடைந்தோம்.
அங்கு பள்ளி நிறுவாகத்தினரோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சுபைதீன் ஹாஜியாரும்,மல்வானையைச்சேர்ந்த இஸ்மாயில் ஹாஜியாரும் இருந்தனர்.அங்கு பள்ளி நிறுவாகத்துடன் அமைச்சர் குழு கலந்துறையாடினர். நிவாரணங்கள் கிடைப்பது பற்றியும்,அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலை பற்றியும் கேட்டறிந்த அமைச்சர் தனது பங்களிப்பாக மூன்று இலட்சம் ரூபாய்களை அந்த மக்களின் நிவாரணத்திற்காக வழங்கியதோடு,வெள்ளம் வருகின்ற காலத்தில் பயண்படுத்த படகொன்றை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
அங்கிருந்த மக்கள் கண்ணீருடன் தங்கள் அவலங்களை அமைச்சரிடம் கூறினார்கள்.அமைச்சர் கண்கலங்கிய வண்ணம் அவற்றைகேட்டார். பின்னர் நாங்கள் வாழும் பிரதேசத்திற்கு அமைச்சர் படகில் வந்தார் அவசரமாக உங்களுக்கு என்ன தேவை பர்வீன் என என்னிடம் கேட்டார்.இல்லை சேர் பாதிக்கப்பட்ட ஆட்டா மாவத்தை பிரதேசத்தை வந்து பாருங்கள் அதுபோதும் என்றேன்.
மீண்டும் திகில் நிறைந்த, இப்போது இரவு ஒன்பது மணி ஆகியிருந்தது, அமைச்சர் பயணித்த படகின் முன்பகுதி வெடித்து காணப்பட்டது. உடைந்து விடுமோ என்ற பயம் நண்பர் சுகைபுக்கு இருந்தது, நீர்மட்டம் சில இடங்களில் குறைந்திருந்ததினால், படகையும்,தோணியையும் செலுத்த முடியவில்லை மீண்டும் சகோதரர் ஜிப்ரியும், ஊடகவியலாளர் அமீர் ஹம்சாவும் நானும் நீரில் இறங்கி தோணியை தள்ளி எடுத்தோம். படகினை சகோதரர் ஜிப்ரியும், இன்னும் சிலரும் தள்ளினார்கள். 15 நிமிடத்தில் ஆட்டா மாவத்தையை அடைந்தோம் நேராக நாங்கள் தற்காலிகமாக வசிக்கும் இடத்திற்கு வந்தார்,ஆறுதல் சொன்னார் அந்தப்பிரதேசத்தை முற்றாக பார்வையிட்டார்.
ஆட்டா மாவத்தையில் வசிக்கும் மக்களின் கண்ணீரக்கதைகளை கேட்டு ஆறுதல் படுத்தினார் அந்தப்பிரதேசத்தின் நிவாரணத்திற்காக இரண்டு இலட்சம் ரூபாய்களை பள்ளிவாயில் தலைவர் ஜனாப் பஹ்மி அவர்களிடம் கையளித்ததோடு இந்தப்பிரதேசத்திற்கும் ஒரு படகை வழங்குவதாக உறுதியளித்தார். மீண்டும் ரக்ஷபான பள்ளிவாசலுக்கு சென்று அங்கு நடைபெறும் நிவாரணப்பணிகளுக்காக ரூபாய் ஐந்து இலட்சத்தினை வழங்கினார் அத்தோடு அங்கும் ஒரு படகினை வழங்குவதாக உறுதியளித்தார்.
அப்போது பிரதியமைச்சர் துலிப்விஜய சேகரவும் அங்கு பிரசன்னமாகியிருந்தார். பியகம தேர்தல் தொகுதியின் சுதந்திரக் கட்சி அமைப்பாளரான அவர் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் அவர்களுக்கு நன்றி கூறினார். இந்தப்பயணத்தில் அமைச்சர் ரிசாட் அவர்களுடன் அமைச்சரின் யாழ் இணைப்பாளர் அமீன் ஹாஜியார், முன்னாள் உபவேந்தர் வி.சி.இஸ்மாயில் உற்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர். ஒரு தலைவன் இப்படித்தான் இருக்க வேண்டும். தன்னை ஒரு முன்மாதிரியான தலைவராக ரிஷாத் பதியுத்தீன் பதிந்து வருகிறார். அறிக்கைகளால் அல்ல மனிதநேயமிக்க செயற்பாடுகளால்