பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு (கோப்குழு) அடுத்த மாதத்திற்குள் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்பிக்க உள்ளது.
நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ள அறிக்கை தற்போது தயார் செய்யப்பட்டு வருவதாக தெரிவுக்குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
26 நிறுவனங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பில் இந்த அறிக்கை மூலம் நாடாளுமன்றத்திற்கு தகவல்கள் முன்வைக்கப்படும்.
மின்சார சபை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உட்பட 26 அரச நிறுவனங்களின் நிதி நடவடிக்கைகள் சம்பந்தமாக நடந்த முறைகேடுகளை கோப் குழு கண்டறிந்துள்ளது.
8ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கோப்குழு அறிக்கை இதுவாகும் எனவும் சுனில் அந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.