இலங்கையில் நடைபெற்ற அதிகார மாற்றத்தின் பின்னர் நல்லதோர் அரசியல் கலாசாரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக உலக வங்கியின் பிரதிநிதிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிகள் குறித்து ஆராய்வதற்காக உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது.
இந்த குழுவினர் இலங்கையில் இருந்து திரும்பும் முன்னர் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து புதிய அரசியல் கலாசாரம் மற்றும் பொருளாதார வளர்சிக்கான சாத்தியங்கள் குறித்து தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கையின் வளர்ச்சிக்கு கை கொடுக்கும் வகையில் கூடுதலான கடன் உதவிகளை வழங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.