Breaking
Sun. Apr 6th, 2025

சட்டவிரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கான அரசின் பொது மன்னிப்பு காலம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

மக்களின் வேண்டுகோளுக்கமைய மீண்டும் பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

அதன்படி எதிர்வரும் மே 30ம் திகதி முதல் ஜூன் 17ம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் அமுலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் தம்மிடம் இருக்கும் சட்டவிரோத துப்பாக்கிகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்கள், பிரதேச செயலகங்கள் அல்லது மாவட்ட செயலகங்களில் ஒப்படைக்க முடியும் என்று பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

இவ்வாறு பொது மன்னிப்பு காலத்திற்குள் ஒப்படைக்கப்படும் சட்டவிரோத துப்பாக்கிகள் சம்பந்தமாக வழக்குத் தாக்கல் செய்வது அல்லது தண்டணை வழங்குவது இல்லை என்று அமைச்சு கூறியுள்ளது.

By

Related Post