வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி வகைகளுக்கு வரிச் சலுகை வழங்கப்பட உள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல இறைச்சி வகைகளுக்கான வரிகளை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் மிருக வதை மிருகக்கொலைகளை வரையறுக்கும் நோக்கில் இந்த வரிச் சலுகை வழங்கப்பட உள்ளது.
சர்வதேச வர்த்தக விவகார அமைச்சின் பரிந்துரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
எதிர்வரும் வாரங்களில் இந்த வரிச் சலுகை பற்றி அறிவிக்கப்பட உள்ளது.
மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, செம்மறியாட்டு இறைச்சி மற்றும் வாத்து இறைச்சி போன்றன இறக்குமதி செய்யும் போது, அறவீடு செய்யப்படும் வரி 60 வீதத்தினால் குறைக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.