Breaking
Mon. Dec 23rd, 2024

நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் சீற்றத்தினால் பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நீலகந்த பிரதேசத்தில் களுகங்கையின் வெள்ள நீர் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 105 பேர் நான்கு அனர்த்த முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே ஜிங் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் பத்தேகம, தொடங்கொட, உனன்விட்டிய ஆகிய பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தப் பகுதிக்கான போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளதால் மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் நில்வளா கங்கையின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக பிரதிப்பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை களனி கங்கையின் நீர்மட்டமானது சாதாரண நிலையில் உள்ளதாகவும் பிரதீப் கொடிப்பிலி சுட்டிக்காட்டியுள்ளார்.

By

Related Post