இலங்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க தயார் என்று சீசெல்ஸ் அறிவித்துள்ளது.
சீசெல்ஸின் சமூக மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வின்சன்ட் மேரிடன் இதனை கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் தமது நாட்டுக்கும் இடையில் உறவை கட்டியெழுப்ப இது உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் என்ற வகையில் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இந்தநிலையில் சீசெல்ஸ் உலக நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமாளிக்க அந்த நாடுகளுடன் இணைந்து செயற்பட தயார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீசெல்ஸின் ஊடாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினர் நிதி பரிமாற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்று குற்றச்சாட்டு தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.