-அஸ்பாக் –
அல் கிம்மா நிறுவனமானது நாடலாவிய ரீதியில் மேற்கொண்டு வரும் சமூகப்பணிகளின் தொடரில் அன்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ள அனர்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாத்தியமான உதவிகளை வழங்கி வருகின்றது.
எமது நிறுவனம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களின் நிலமைகளை அறிந்து கொண்டு தொடர்ந்தும் துரிதமான உதவிகளையும் செய்து வருகிகிறது.
அந்த வகையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வெள்ளம்பிட்டிய கொலன்னாவ மக்களுக்கும் தனது உதவிகளை வழங்கியது சுமார் 300 குடும்பங்களுக்கு உலர்உணவு, பாய், தலையனை உள்ளிட்ட பொருட்களையும் பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளையும் வழங்கியது.
அதன் போது எமது நிறுவனத்தின் பொதுத்தலைவர் முதீப் தவாப் அஸ்ஸபீயி அவர்களும் மற்றும் பதினைந்துக்கும் மேற்பட்ட சவூதியரேபிய றியாத் நகரைச் சேர்ந்த சகோதரர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் பாதிக்கப்பட்ட பலருக்கு பணத்தொகையும் சிறார்களுக்கு இனிப்பு வகைகளையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் எமது நிறுவனத்தின் பணிப்பாளர் அஅள. ஹாறூன் (ஸஹ்வி) அவர்களின் வழிகாட்டலின்க நடைபெற்றது இதில் நிறுவனத்தின் தொண்டர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு பணிகளை மேற்கொண்டனர்.