Breaking
Tue. Sep 24th, 2024

2015ம் ஆண்டு பொரள்ளை பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதல் சம்வம் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 15ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றச் சந்தேகநபர்கள் இருவர் நீதிமன்றில் ஆஜராகாததன் காரணமாகவே வழக்கு 15ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக சட்டத்தரணி ரமீஸ் பஷீர் கூறினார்.

குறித்த வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுக்கு கொண்டு வருவதற்கு இருதரப்பும் இணங்கியுள்ள போதிலும், குற்றச் சந்தேகநபர்கள் இருவர் இன்று நீதிமன்றில் ஆஜராகி இருக்கவில்லை என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும் பள்ளிவாசலுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான நஷ்டஈடாக 50,000 ரூபா வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அந்த நஷ்டஈட்டுப் பணத்தை ஸ்ரீ வஜிரஸ்ஞான விகாரைக்கு வெள்ள நிவாரண பணிகளுக்கு வழங்குவதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் முன்வந்துள்ளது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, பொரள்ளை பள்ளிவாசல் சார்பில் சட்டத்தரணிகளான சிராஸ் நூர்தீன், ரமீஸ் பஷீர், ருஷ்தி ஹபீப், ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

By

Related Post