Breaking
Fri. Nov 15th, 2024

பொகவந்தலாவ லொய்னோன் தோட்டப் பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையால் 30 குடும்பங்களை சேர்ந்த 142 பேரை இடம்பெயருமாறு வலியுறுத்தியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று தோட்ட நிர்வாகத்தால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி ஏற்பட்ட மண்சரிவின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும் மகளும் பலியானதையடுத்து,

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினர் மேற்கொண்ட பரிசோதனையின் போது குறித்த தோட்ட மக்களை வெளியேறுமாறு முன்கூட்டியே அறிவித்துள்ள போதிலும் இந்த அறிவித்தலை தோட்ட நிர்வாகம் லொய்னோன் தோட்ட மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை என அம்மக்கள் குற்றம் சுமத்தினர்.

லொய்னோன் தோட்ட மக்களின் குடியிருப்புகளில் பாரிய வெடிப்புகள் காணப்படுவதோடு குடியிருப்புகளுக்கு அருகாமையில் மண்மேடு சரிந்து விழும் அபாயத்தில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொகவந்தலாவ லொய்னோன் தோட்ட மக்கள் தற்பொழுது வாழ்ந்து வரும் பகுதி பாதுகாப்பு அற்ற பகுதியாக காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த மக்களுக்கு பொருத்தமான இடம் ஒன்றை தெரிவுசெய்து பொகவந்தலாவ லொய்னோன் வீடுகளை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொகவந்தலாவ லொய்னோன் தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

By

Related Post