வெள்ளத்திற்கு பின்னர் கொழும்பு மாவட்டத்தில் காணப்பட்ட 2500 டொன் கழிவுகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளன.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயற்பாட்டில் இராணுவம், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை ஆகியன இணைந்து கழிவகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இதுவரை கொலொன்னாவை, மீதொட்டமுல்ல, கொட்டிகாவத்த முல்லேரியா, வெல்லம்பிட்டிய, கொதடுவ, கொஹிலவத்தை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் தொண்டு நிறுவனங்களும் இப்பணிகளில் இணைந்து கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சின் அனர்த்த முன்னாயத்த பிரிவு கூறியுள்ளது.
அவ்வாறு கலந்துகொள்ள விரும்புவோர் ஐ.டீ.எச். இற்கு அருகில் இருக்கும் டீ.பி. இலங்கரட்ன மைதானத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.