Breaking
Fri. Nov 15th, 2024

இந்திய ராணுவத்தில் பணிப்புரிந்த மக்தூம் ஹுசைன் தாடி வைத்திருந்த காரணத்தால் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது வழக்கு தொடர்பாக விசாரணை செய்த நீதிமன்றமும் அவரை பணியிலிருந்து நீக்கியது சரியே என்று தீர்ப்பு கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்தியா ஓர் மதச்சார்பற்ற நாடாக இருந்தும் 2 சதவீதம் உள்ள சீக்கியர்களால் தாடி வைத்து அனைத்து அரசு பதவிகளிலும் பணியாற்றும்போது 20 சதவீதம் உள்ள முஸ்லிம்களால் தாடி வைக்க முடியவில்லை என்றால் இந்திய சட்டம் அதிகாரிகளால் கேள்விக்கூத்தாக்கபடுகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும் தாடி பிரச்சினைக்கு நாமும் ஓர் காரணம் என்பதை இங்கே பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது.

2 சதவீதம் உள்ள சீக்கியர்களை யாரும் தாடி வைக்கக்கூடாது என்று சொல்வதில்லை, அதற்கு காரணம் அவர்கள் அனைவரும் கட்டாயமாக தாடி வைத்தே தீர்வோம், இது எங்கள் மத நம்பிக்கை என்கிறார்கள்.

ஆனால் முஸ்லிம்களில் சிலர் தாடி வைத்து, சிலர் தாடி வைக்காததால் தாடி முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த ஆண்டு நமது முகநூல் முஸ்லிம் மீடியாவுக்கு கல்லூரி மாணவர் ஒருவர் தங்களுடைய கல்லூரியில் தாடி வைக்க அனுமதி மறுக்கிறார்கள் என்று கூறினார். அதனடிப்படையில் நாம் அந்த கல்லூரி நிர்வாகத்தினரை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டதற்கு எங்கள் கல்லூரியில் அனைத்து முஸ்லிம் மாணவர்களும் தாடியில்லாமல் இருக்கும்போது இவருக்கு மட்டும் என்ன பிரச்சினை ? என்று கூறினார்கள்.

இந்தியாவில் கொலை செய்யக்கூடாது, கொள்ளையடிக்கக்கூடாது, கற்பழிக்க கூடாது என்று சட்டமிருந்தும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களும் இருக்கிறார்கள், சட்டத்திற்கு கட்டுப்படாதவர்களும் இருக்கிறார்கள். யாரோ சட்டத்தை மீறுகிறார்கள் என்பதற்காக அனைவரும் சட்டத்தை மீற வேண்டிய அவசியம் இல்லை, அதுப்போல் யாரோ தாடி வைக்கவில்லை என்பதற்காக இவரும் இஸ்லாமிய சட்டத்தை மீற வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீங்கள் தாடி வைக்க அனுமதி மறுத்தால் முஸ்லிம் இயக்கங்கள் மூலம் போராட்டங்கள் மூலமாகவும், நீதிமன்ற கதவுகளை தட்டியும் நீதியை நிலைநாட்டுவோம் என்றும் கூறினோம்.

இதை இங்கே இப்போது சுட்டிக்காட்டுவதற்கு நம்முடைய பிரச்சினைகளுக்கு நாமும் ஓர் காரணமாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து அனைத்து முஸ்லிம்களும் தாடியை பேணுவோம், முஸ்லிம்கள் கட்டாயம் தாடி வைக்கக்கூடியவர்கள் என்ற நிலையை ஏற்படுத்துவோம்.

உங்களில் சிலர் தாடி வைக்காததால் தாடி வைக்கக்கூடியவர்களுக்கு உங்களால் பிரச்சினை ஏற்படுகிறது என்பதையும் கவனத்தில் கொண்டு அல்லாஹ்வுடைய ரசூல் அவர்கள் வைக்க சொன்ன தாடியை வைத்தே தீர்வோம், எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் உடைத்தே தீர்வோம் என்பதை சூளுரையுங்கள்.

கடந்த காலங்களில் தாடி வைக்க அனுமதி மறுக்கப்பட்டு உச்சநீதிமன்ற படியை மிதித்து தங்களுடைய உரிமையை நிலைநாட்டிய போராளிகளை படத்தில் காண்கிறீர்கள்.

By

Related Post