Breaking
Mon. Dec 23rd, 2024

தன்னைக் கைது செய்வதை தடுப்பதற்கு உத்தரவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமார வெல்கம போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் இலங்கை போக்குவரத்து சபையினால் பஸ் பாகங்கள் சில கொள்வனவு செய்யப்பட்ட வேளையில் மோசடி இடம்பெற்றதாகக் கூறி குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்வதற்கானநடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும்,அதற்கான தடை உத்தரவை வழங்கமாறு கோரியே குமார வெல்கம நீதிமன்றில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று (9) நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டசந்தர்ப்பத்தில் குறித்த மனுவிற்கு முக்கியமான ஆவணத்தைநீதிபதியிடம் சமர்ப்பிக்க கால அவகாசம் தேவை என மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி கோரியிருந்தார்.

அதற்கமைய குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் திகதிக்கு ஒத்தி வைப்பதாக நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post