அண்மையில் பாதிப்பு உள்ளான சாலாவ இராணுவ முகாமிற்குள் புலனாய்வு பிரிவினர் பிரவேசிக்க இருவார காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இராணுவப் படையினர் இந்த தடையை விதித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த விசாரணைகள் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனினும் புலனாய்வுப் பிரிவினர் குறித்த இராணுவ முகாமிற்குள் பிரவேசித்து விசாரணைகளை நடத்தவும் கண்காணிக்கவும் இரண்டு வார காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.