ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் 32வது அமர்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 13ம் திகதி ஆரம்பமாகும் குறித்த அமர்வுகளானது ஜுலை மாதம் முதலாம் திகதி வரை நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பாக இங்கு ஆராயப்படவுள்ளதோடு, இலங்கை தொடர்பிலும் மிகுந்த அவதானம் செலுத்தப்படும் என நம்பப்படுகின்றது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இலங்கை மனித உரிமைகளின் முன்னேற்றம் தொடர்பில் குறித்த அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையானது இந்த அமர்வுகளின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.