சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அடுத்துவரும் பருவ காலமான 2016/2017 ம் ஆண்டுக்கான நடுவர் குழாம் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட குழாமில் பெரிதான மாற்றங்கள் இன்றி, இந்த குழாம் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி பங்கெடுத்த போட்டிகளில் இந்தியாவுக்கு சார்பான, அல்லது தவறான தீர்ப்புக்கள் கொடுத்த நடுவர் ரவியும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார். இந்தக் குழுவில் 12 நடுவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
2015/2016 ம் ஆண்டு பருவகாலத்தில் இடம்பெற்ற அனைத்து வகையான ஆட்டங்களில் 95.6 வீதமான முடிவுகள் நடுவர்களால் சரியாக வழங்கப்பட்டுள்ளன. டெஸ்ட்,ஒருநாள், டி 20 போட்டிகள் அடங்கலாக குறித்த காலப்பகுதியில் மொத்தம் 220 போட்டிகள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நடுவர் குழாம்-அலீம் டார் , குமார் தர்மசேன , மரைஸ் எராஸ்மஸ் ,கிரிஸ் காப்பானே , இயன் கோல்ட் , ரிச்சர்ட் இல்லிங்வொர்த்,ரிச்சர்ட் கேட்டல்போரோ, நியேல் லோங், ப்ருஷ் ஓக்ஷென்பொர்ட், சுந்தரம் ரவி, போல் ரைபல்,ரோட் டக்கர் .