அடுத்த வருடம் முதல் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றுவோர் அனைவரும் சித்தியடைய வைப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்ட போது கல்வி அமைச்சர் இதனைத்தெ ரிவித்துள்ளார்.
அத்துடன் அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட பாடசாலை கல்வியை பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மனித மூலதனத்தை முன்னேற்றுவதற்கு எதிர்காலத்திற்கு பொருத்தமான கல்வி மாற்றத்தை இலங்கையில் ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, அனைத்து மாணவர்களும் 13 வருட கல்வியை பெறுவது கட்டாயமானது என பிரதமரும் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.