கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக்களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய அலைபேசியில் வீடியோ செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில், தல்தென ஞானசார தேரர் சிகிச்சைப் பெற்றுவருகின்றார். அவரை பார்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்தார் அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார ஆகியோரும் சென்றிருந்தனர்.
தல்தென ஞானசார தேரரிடம் நலன்விசாரித்தவர்கள், அந்த வைத்தியசாலையின் 5ஆவது மாடியில், சிகிச்சைப்பெற்றுவருகின்ற குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்கவின் நலனை விசாரிப்பதற்காக சென்றுள்ளனர்.
அவரிடம், நலன்விசாரித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அம்மாடியிலிருந்து யன்னல் ஊடாக வெளியே பார்த்துள்ளார். அப்பொழுது, வானத்தை நோக்கி புகை கிளம்பியுள்ளது. இந்த நேரத்தில் யாரோ வானவேடிக்கை விடுகின்றனர் என்று தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, புகைகிளம்பியதை தன்னுடைய அலைபேசியில் வீடியோ செய்துகொண்டுள்ளார்.
அவருடன் சென்றிருந்த முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் தங்களுடைய அலைபேசிகளிலும் அந்த புகைகிளம்பியதை வீடியோ செய்துகொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.