Breaking
Mon. Dec 23rd, 2024

ஹப்புத்தளை, கஹகொல்லை தோட்டப்பகுதியிலிருந்து அதிசக்தி வாய்ந்த ஜே.ஆர் ரக கைக்குண்டுகள் இரண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளதென ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்த பொதியொன்று தொடர்பில், பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, அவ்விடத்துக்கு வந்த பொலிஸார்,  பொதியை சோதனைக்குட்படுத்திய போது, அதில் அதிசக்தி வாய்ந்த ஜே.ஆர் ரக கைக்குண்டுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அது குறித்து பண்டாரவளை நீதவான் நீதிமன்ற நீதவானுக்கு அறிவித்து, அவரின் உத்தரவுக்கமைய குண்டுகள் செயலிழக்கும் விசேட பொலிஸ் பிரிவினரால் கைக்குண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டன.

By

Related Post