Breaking
Sun. Sep 22nd, 2024

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் ஜூலை மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல பரணகம தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்கு அரசாங்கம் புதிய வழிமுறையை உருவாக்க தீர்மானித்துள்ளதாகவும் அது தொடர்பில் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை  எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளித்தவுடன் தமது ஆணைக்குழுவின் கடமை நிறைவடைந்துவிடும் என அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, தமக்கு வழங்கப்பட்ட அலுவலகம், உபகரணங்கள், கணினி உள்ளிட்ட பொருட்கள் ஜூலை 15ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

By

Related Post