பொது மன்னிப்பின் கீழ் 2763 படையினர் சட்டரீதியாக பதவியிலிருந்துநீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்கள் உத்தியோகபூர்வமாக விலகுவதற்குகடந்த திங்கட்கிழமை முதல் பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய கடந்த 3 நாட்களில் 2574 இராணுவ சிப்பாய்கள் சட்டரீதியாக இராணுவத்திலிருந்து விலகுவதற்கு முன்வந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர்பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் விமானப்படை சிப்பாய்கள் 118 பேரும், கடற்படை சிப்பாய்கள் 71பேரும் குறித்த இந்தக் காலப் பகுதியில் சட்டரீதியாக விலகுவதற்கு முன்வந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த பொதுமன்னிப்பு காலமானது அடுத்த மாதம் 12ம் திகதியுடன்நிறைவுறுவதாகவும், அதற்கிடையில் படையினர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.