Breaking
Fri. Nov 15th, 2024

பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த ஏராளமான கோடீசுவரர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள் பெயரில் முதலீடு செய்து வரி ஏய்ப்பு செய்து வந்துள்ளனர். இது தொடர்பான சட்ட ஆவணங்களை, பனாமாவை மையமாக கொண்டு செயல்படும் ‘மொசாக் பொன்சேகா’ என்ற சர்வதேச நிறுவனம் பாதுகாத்து வருகிறது.

இந்த நிறுவனம் ரகசியமாக வைத்திருந்த ஏராளமான ஆவணங்கள் பனாமா லீக்ஸ் என்ற பெயரில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி உலக அளவில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியாவின் பிரபல நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களின் பெயர்கள் இந்த வரி ஏய்ப்பு பட்டியலில் இடம் பெற்றிருந்தன.

இந்த விவகாரத்தால் கடும் அதிர்ச்சியடைந்த மொசாக் பொன்சேகா நிறுவனம் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக ஜெனீவாவில் இயங்கி வரும் மெசாக் பொன்சேகா நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஐ.டி. ஊழியர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார்.பெரும் எண்ணிக்கையிலான நம்பகமான ஆவணங்களை கசியவிட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக சுவிட்சர்லாந்து பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

By

Related Post