Breaking
Mon. Dec 23rd, 2024

தென்கொரியாவில் இலங்கை நாட்டின் கலை கலாசார நிகழ்வொன்று கடந்த 11 ஆம் திகதி சியோல் கிரான்ட் பார்க்கில் நடைபெற்றது. கொரியாவின் இலங்கைக்கான தூதரகமும், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகமும் இணைந்து ஏற்பாடு செய்த இவ் கலாசார நிகழ்வில் கடந்த 2010 ஆம் ஆண்டு இலங்கை நாட்டினால் தென்கொரியாவுக்கு வழங்கப்பட்ட இரண்டு யானைக்குட்டிகளின் பிறந்தநாள் நிகழ்வும் கொண்டாடப்பட்டது.

இலங்கை நாட்டின் கலாசார அம்சங்களை கொரிய விருந்தினர்கள் மற்றும் சிறுவர்களுடன் பல்வேறுபட்ட வழிகளில் பரிமாற்றி நாட்டின் கலாசாரத்தினை ஒருங்கிணைப்பதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.

நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை கலை கலாசார நடனம், நாட்டின் சுற்றுலாத்துறையை விளக்கும் பெரிய பதாகைகள், இலங்கை நாட்டின் பாரம்பரிய உணவுப் பொருட்களும் இதன் போது பரிமாறிக் கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து அந்நிகழ்வில் யானைகளின் படங்களை வரையும் சித்திரப் போட்டியும் சிறுவர்களிடையே நடாத்தப்பட்டு அவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரையாற்றிய கொரியா நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் மனிஷா குணசேகர, இலங்கைக்கும் கொரியாவுக்கும் இடையிலான பலமான நட்புறவினை பிரதிபலிக்கும் வகையிலேயே இவ் இரு யானைகளும் இலங்கை நாட்டினால் கொரியாவுக்கு வழங்கப்பட்டன என சுட்டிக்காட்டினார்.

கொரியா சியோல் பார்க்கின் தலைவர் சோங் சுன் – ஹன், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

By

Related Post