Breaking
Mon. Dec 23rd, 2024

பிரித்தானிய எலிசபெத் மகாராணியாரின் 90 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்று (16) பிற்பகல் பிரித்தானிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து விசேட நினைவுக் குறிப்பொன்றை பதிவு செய்தார்.

மகாராணியாரின் 90 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று இரவு ஒரு விசேட நிகழ்வு பிரித்தானிய உயரிஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதியை உயரிஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் வரவேற்றார்.

ஜனாதிபதி, பொதுநலவாய நாடுகளின் தலைவராக இருந்தமையை நினைவுகூறும் வகையில் அங்குள்ள பூங்காவில் நட்டிய நாக மரக்கன்றையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

By

Related Post