மேல் மாகாண மெகா போலிஸ் திட்டத்தை துரிதப்படுத்துமாறு துறைசார் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிற்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண அபிவிருத்தியை மேற்கொள்ளும் நோக்கில் மெகா போலிஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மெகா போலிஸ் திட்டம் குறித்து அலரி மாளிகையில விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
கொழும்பு நகரின் வெள்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்த உரிய திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் வலயங்களை உருவாக்கவும், மேம்பாலங்களை அமைக்கவும் இந்த கலந்துரையாடலின் போது யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வெலிக்கடைச் சிறைச்சாலையை களுத்துறைக்கு மாற்றி அந்த நாற்பது ஏக்கர் காணியில் வர்த்தக நகரமொன்றை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.