அமெரிக்காவில் பேட்டரியில் பறக்கும் விமானத்தின் சோதனை ஓட்டம் விரைவில் நடைபெற உள்ளது.
விமானங்கள் தற்போது பெட்ரோலில் இயங்குகின்றன. அதே நேரத்தில் சூரிய ஒளி மூலம் இயங்கும் சிறிய ரக விமானங்கள் தயாரிக்கப்பட்டு அது குறிப்பிட்ட தூரம் பறந்து சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் பேட்டரியில் பறக்கும் விமானத்தை அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. அதற்கு ‘மோஸ்வெல்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இதில் பேட்டரியுடன் இணைக்கப்பட்ட 14 எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை விமானத்தின் ‘புரோபெல்லர்’கள் இயங்க உதவும். இந்த விமானம் அதிக திறன் கொண்டதாக இருக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பேட்டரி விமானம் செயல்பாட்டினால் பயண நேரம் குறையும். எரிபொருள் சிக்கனம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் விளையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பேட்டரி விமானத்தின் சோதனை ஓட்டத்தை விஞ்ஞானிகள் விரைவில் நடத்த உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.