Breaking
Fri. Dec 27th, 2024

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே எதிர்வரும் 27ம் திகதி பாரியமோசடி விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய ஊழல் மோசடி விசாரணைப்பிரிவின் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்இடம்பெறும் விசாரணை ஒன்றிற்காக இவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக இவர்அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாவலப்பிட்டி புகையிரத திணைக்களத்தின் நிலமொன்றை அளுத்கமகே கட்டளைகள்நிதியத்திற்கு வழங்கப்பட்டுள்ள விடயம் தொடர்பாகவே இவரிடம் விசாரணைகள்செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த விசாரணைகளுக்காக எதிர்வரும் 27ம் திகதி காலை பத்துமணியளவில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

By

Related Post