Breaking
Fri. Nov 22nd, 2024

இந்திய மாநிலங்களான பீஹார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசத்தை தாக்கிய மின்னல்களினால் குறைந்தது 79 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பீஹாரில் 53 பேர் கொல்லப்பட்டதுடன், கிழக்கு மாநிலமான ஜார்க்கண்டில் பத்து பேர் கொல்லப்பட்டிருந்ததுடன், மத்திய பிரதேசத்தில், குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (21) பெய்த கடுமையான மழையினுள், தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருக்கும்போதே பெரும்பாலானவர்கள் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவகால மழையின்போது இந்தியாவில் மின்னல் தாக்குதல்கள் வழமை என்றநிலையில், தேசிய குற்றப் பதிவுகள் முகவராண்மையின்படி, 2005ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 2,000 பேர் மின்னல் தாக்குதல்களினால் இந்தியாவில் மரணமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post