Breaking
Sun. Dec 22nd, 2024

– ஏ.ஆர்.ஏ.பரீல் –

மஹி­யங்­க­னையில் இடம்­பெற்ற பௌத்த கொடி எரிப்பு சம்­ப­வத்­தை­ய­டுத்து பொது­ப­ல­சேனா அமைப்பு அளுத்­கமை சம்­பவம் போன்ற ஒன்­றினை உரு­வாக்க முயற்­சிப்­ப­தா­கவும் அப்­ப­குதி முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச்  செய்­யு­மாறும் மஹி­யங்­கனை பிர­தேச சபையின் முன்னாள் உறுப்­பி­னரும் ஜாதிக பல­சே­னாவின் செய­லா­ள­ரு­மான வட்­ட­ரக்க விஜித தேரர் கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிசாத் பதி­யு­தீ­னி­டமும் நகர திட்­ட­மிடல் மற்றும் நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்சர் ரவூப் ஹக்­கீ­மி­டமும் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.
அமைச்­சர்கள் இரு­வ­ரையும் தொலை­பே­சி­யூ­டாக தொடர்பு கொண்டு மஹி­யங்­க­னையில் இடம்­பெற்று வரும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை விளக்­கி­யுள்­ள­தா­கவும் அமைச்­சர்கள் இரு­வரும் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.
அவர் தொடர்ந்தும் இது தொடர்­பாகத் தெரி­விக்­கையில், ‘மஹி­யங்­க­னையில் நீண்­ட­கா­ல­மாக முஸ்­லிம்கள் பெரும்­பான்மை இனத்­த­வ­ருடன் ஒற்­று­மை­யா­கவும் நல்­லு­ற­வு­டனும் வாழ்ந்து வரு­கின்­றார்கள்.
ஆனால் அங்கு இடம்­பெற்ற பௌத்த கொடி எரிப்பு சம்­ப­வத்­தை­ய­டுத்து பொது­ப­ல­சே­னாவும் இன­வா­தி­களும் இன­வி­ரி­சலை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர்.
கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மஹி­யங்­க­னையில் நடை­பெற்ற எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் கலந்­து­கொண்ட பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஆற்­றிய உரை­யை­ய­டுத்து அப்­ப­கு­தியில் உள்ள முஸ்­லிம்கள் மத்­தியில் பீதி ஏற்­பட்­டுள்­ளது.
அவர் அளுத்­க­மையில் ஆற்­றிய உரை­யை­ய­டுத்து  ஏற்­பட்ட வன்­செ­யல்­களை மக்கள் மறந்­து­வி­ட­வில்லை. அதனால் முஸ்லிம் அமைச்­சர்கள் ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் கலந்­து­ரை­யாடி இவ்­வா­றான நிலைமை ஏற்­ப­டா­தி­ருக்க நட­வ­டிக்கை எடுக்கும் படி வேண்­டி­யி­ருக்­கிறேன்.
பௌத்த கொடி எரிப்பு சம்­ப­வத்தில் சந்­தே­கத்தின் பேரில் கைது­செய்­யப்­பட்­டுள்ள முஸ்லிம் இளை­ஞர்கள் சட்­டத்தின் முன்­நி­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அவர்கள் குற்­ற­வா­ளிகள் என்றால் தண்­டனை வழங்க வேண்­டி­யது சட்­டத்தின் கட­மை­யாகும்.
இது போன்று கைது செய்­யப்­பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெரும்பான்மை இனத்தவர் இருவரும் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இதற்கான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்தி இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை உருவாக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கதாகும் என்றார்.

By

Related Post