Breaking
Fri. Nov 15th, 2024

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்­தா­னியா வெளியேறும் தீர்மானம் நாட்டின் நன்மைக்குரியதல்ல என அந்­நாட்டின் பிர­தமர் டேவிட் கெமரூன் தெரி­வித்­துள்ளார்.

ஆனால் அந்த தீர்மானம் மதிக்கப்பட்டு சிறந்த சாத்தியமான முறையில் நடைமுறை படுத்தப்பட வேண்டும் என்றும் கூறி­யுள்­ளார்.

பிரித்­தா­னிய பிர­­தமர் டேவிட் கெமரூன்  விலக போவதாக அறிவித்த பின்னர் நாடா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் ஆற்­றிய உரை­யில், ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­­ருந்து முறையாக விலகல் நடைமுறை குறித்து தனக்கு அடுத்து வரும் பிரதமர் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய அண்டை நாடுகளோடு வலிமையான சாத்தியமான பொருளாதார பிணைப்பை பிரிட்டன் உருவாக்க வேண்டும் என்று கெமரூன் தெரி­வித்­துள்ளார்.

இதன்போது மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படாது எனவும் பிரதமரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

By

Related Post