Breaking
Fri. Nov 15th, 2024

இலங்­கை­யா­னது நீதிப்­பொ­றி­முறை விட­யத்தில் சர்­ வ­தேச பங்­க­ளிப்பை பெற்றுக் கொள்­வ­தற்கு அஞ்­ச­வில்லை. கடந்­த­கா­லங்­களில் பல விட­யங்­களில் சர்­வ­தேச பங்­க­ளிப்­பினை பெற்­றுள்ளோம். சர்­வ­தேச பங்­க­ளிப்பில் பல தன்­மைகள் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் இவை குறித்து ஆலோ­சனை செயற்­பாட்­டி­லேயே தீர்­மா­னிக்க முடியும் என்று வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர நேற்று ஜெனி­வாவில் தெரி­வித்தார்.

எவ்­வா­றெ­னினும் நீதிப்­பொ­றி­மு­றை­யா­னது பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் நம்­பிக்கை கொள்ளும் வகையில் அமையும். இதற்­கான பாதை சவா­லா­க­வுள்­ளது. ஆனால்

அது நல்­லி­ணக்­கத்­தையும் இலக்­கையும் கொண்­ட­தா­க­வுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஜெனி­வாவில் நடை­பெற்­று­வரும் 32 ஆவது கூட்டத் தொடரில் நேற்­றைய தின அமர்வில் இலங்­கையின் சார்பில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

இலங்­கையின் தேசிய அர­சாங்­கத்­துக்கு ஒரு­வ­ருட பூர்த்­தி­யா­கும்­போது பல சாத­னைகள் அடை­யப்­பட்­டி­ருக்கும். திருப்­தி­ய­டைக்­கூ­டிய நிலைமை ஏற்­படும். மனித உரி­மையை பாது­காத்தல் மற்றும் ஊக்­கு­வித்தில், நல்­லி­ணக்­கத்தை அடைதல் என்­ப­ன­வற்றை சர்­வ­தேச சமூ­கத்­துடன் இணைந்து இலங்­கை­யினால் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

தற்­போது நல்­லி­ணக்க பொறி­மு­றை­யொன்றை அமைப்­ப­தற்­காக பிர­தமர் அலு­வ­ல­கத்­தினால் நல்­லி­ணக்க செய­ல­க­மொன்று நிறு­வப்­பட்­டுள்­ளது. நிலை­மாறு கால நீதியை பெற்றுக் கொள்­வ­தற்கு ஒரு­பொ­றி­முறை தேவை என்­பதை அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்­கி­றது. சிலர் இந்த பொறி­முறை அமைப்­பா­னது தாம­தத்­திற்­கான உபாயம் எனக்­கூ­று­கின்­றனர். இது தவ­றா­ன­தாகும்.

இந்த நல்­லி­ணக்­கத்­துக்­கான செய­ல­க­மா­னது ஏற்­க­னவே ஆலோ­ச­னைகள் வேலைத்­திட்­டத்தை மேற்­கொண்டு வரு­கி­றது. குறிப்­பாக பொறி­மு­றை­யுடன் தொடர்­பான விசா­ரணை நுட்­பங்கள், தட­ய­வியல் செயற்­பா­டுகள் மற்றும் வடி­வ­மைப்பு என்­ப­ன­வற்­றுக்­கான ஆலோ­ச­னைகள் ஏற்­கனே ஆரம்­பிக்­கப்­பட்டு விட்­டன.

அது­மட்­டு­மன்றி மக்­க­ளுடன் ஆலோ­ச­னை­களை நடத்­து­வ­தற்­காக சிவில் சமூக பிர­தி­நி­தி­களை கொண்ட விசேட செய­ல­ணி­யொன்றும் நிய­மனம் செய்­யப்­பட்­டுள்­ளது. பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் மக்­களின் ஆலோ­ச­னையை பெறவே இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் நல்­லி­ணக்­கத்தை அடை­வ­தற்­காக மீள்­நி­க­ழா­மையை உறு­திப்­ப­டுத்­தவும் தேசிய ஒற்­றுமை மற்றும் நல்­லி­ணக்க அலு­வ­ல­க­மொன்றும் ஜனா­தி­ப­தியின் கீழ் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. காணா­மல்­போனோர் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக நிரந்­தர அலு­வ­ல­க­மொன்றை அமைப்­ப­தற்­கான வரைபு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அமைச்­ச­ர­வை­யிலும் இதற்கு அங்­கீ­காரம் கிடைத்­துள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கையை பொறுத்­த­வரை இது நல்­லி­ணக்­கத்­துக்­கான ஒரு மையில் கல் என்று குறிப்­பி­டலாம். அது­மட்­டு­மன்றி காணா­மல்­போ­னோர்­க­ளுக்கு காணா­மல்­போன சான்­றி­தழ்­களை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அது­மட்­டு­மன்றி காணா­மல்­போ­னோ­ருக்கு பொறுப்­புக்­கூ­று­வ­தற்­காக அர­சாங்கம் கைச்­சாத்­திட்­டுள்­ள­துடன் அதற்­கான சட்­ட­மூ­லத்தை கொண்­டு­வ­ர­வுள்­ளது.

மேலும் புதிய பயங்­க­ர­வாத தடுப்பு சட்­டத்­திற்­கான வரைபை அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­திற்கு பதி­லா­கவே இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. சித்­தி­ர­வதை விவ­காரம் தொடர்பில் பொலிஸ் ஆணைக்­கு­ழுவும் மனித உரிமை ஆணைக்­கு­ழுவும் நட­வ­டிக்கை எடுக்கும்.

கடந்த வாரம் வடக்கில் இரா­ணு­வத்­தி­ட­மி­ருந்த 701 ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டன. மேலும் 2018 ஆம் ஆண்டு இரா­ணு­வத்­தி­ட­முள்ள பொது­மக்­களின் காணியும் விடு­விக்­கப்­பட்­டு­விடும். அர­சாங்­க­மா­னது ஜன­நா­யகம், அபி­வி­ருத்தி மற்றும் நல்­லி­ணக்கம் ஆகிய மூன்று திட்­டங்­களின் அடிப்­ப­டையில் செயற்­ப­டு­கி­றது.

தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இலங்கை தற்­போது உல­கிற்கு திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளது. இலங்கை சர்­வ­தேச சமூ­கத்­துடன் நம்­பிக்­கை­யுடன் செய­லாற்­று­கி­றது. விசேட ஆணை­யா­ளர்கள், விசேட அறிக்­கை­யா­ளர்கள், ஐ.நா. குழு­வி­னர்கள் இலங்கை வந்து செல்­கின்­றனர். ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரும் இலங்கை வந்­தி­ருந்தார்.

எம்மை விமர்­சிக்கும் அனை­வரும் எமது நாட்­டுக்கு வரு­கை­தர வேண்­டு­மனெ அழைப்பு விடுக்­கிறோம். ஒரே இரவில் நல்­லி­ணக்­கத்தை அடைய முடி­யாது. அதற்கு கடு­மை­யான அர்­ப­ப­ணிப்பு, கவனம் தேவை­யாகும். நான் நீதி பொறி­மு­றையை சர்­வ­தேச உத­வி­யுடன் அமைப்­பது குறித்து ஆராய்­கிறோம்.

இலங்­கை­யா­னது நீதிப்­பொ­றி­முறை விட­யத்தில் சர்­வ­தேச பங்­க­ளிப்பை பெற்றுக் கொள்­வ­தற்கு அஞ்­ச­வில்லை. கடந்­த­கா­லங்­களில் பல விட­யங்­களில் சர்­வ­தேச பங்­க­ளிப்­பினை பெற்­றுள்ளோம். சர்­வ­தேச பங்­க­ளிப்பில் பல தன்­மைகள் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் இவை குறித்து ஆலோ­சனை செயற்­பாட்­டி­லேயே தீர்­மா­னிக்க முடியும்.

எவ்­வா­றெ­னினும் நீதிப்­பொ­றி­மு­றை­யா­னது பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் நம்­பிக்கை கொள்ளும் வகையில் அமையும். இதற்­கான பாதை சவா­லா­க­வுள்­ளது. ஆனால் அது நல்­லி­ணக்­கத்­தையும் இலக்­கையும் கொண்­ட­தா­க­வுள்­ளது. இந்த விட­யத்தில் சிலர் எமது அர்ப்­ப­ணிப்பு குறித்து சந்­தேகம் வெ ளியி­டு­கின்­றனர். சிலர் அதனை தோற்கடிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் எம்மை ஆதரிப்பவர்கள் எமது பயணம் தடையாகிவிடுமோ என கவலையடைகின்றனர்.

இனவாதிகளும் இவ்வாறு பார்க்கின்றனர். ஆனால் அவர்களுக்கு நான் ஒன்றையும் கூற விரும்பவில்லை. பொதுவாக ஒருவிடயத்தை கூறுகின்றேன். அதாவது எமது பயணமானது அர்ப்பணிப்பு, நல்லிணக்கம், அபிவிருத்தி என்பவற்றை நோக்கி அமைகிறது. அடுத்த வருடம் மார்ச் மாதம் நான் இங்கு வரும்போது புதிய இலங்கை கட்டியெழுப்பப்பட்டிருக்கும். எமக்கு உதவுகின்றவர்கள், தொழில்நுட்ப உதவிகளை வழங்குகின்றவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். எமது பயணத்திற்கு பொறுமையுடன் ஆதரவு தருமாறு கோரிக்கை விடுக்கிறோம். சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவோம் என்றார். vk

By

Related Post