Breaking
Fri. Nov 15th, 2024
 
மஹி­யங்­கனை சம்­பவம் குறித்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்பிட்டார்.
 
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் …
 
மஹி­யங்­க­னையில் அளுத்­கமை போன்ற கல­வரம் உரு­வானால் அதற்கு முஸ்லிம் கவுன்­ஸிலே பொறுப்புக் கூற­வேண்டும்.அளுத்­கம சம்­ப­வத்தின் பின்­ன­ணியும் முஸ்லிம் கவுன்­ஸிலே என சந்­தே­கிக்­கின்றோம் 
 
பௌத்­தர்கள் முஸ்லிம் கொடி­யையோ குர்­ஆ­னையோ எரிக்­க­வில்லை. மஹி­யங்­க­னையில் முஸ்­லிம்­களே பௌத்த கொடி­யையும் வெசாக் கூடு­க­ளையும் எரித்­துள்­ளார்கள்.

பௌத்த கொடியை எரித்த முஸ்­லிம்­களை கண்­டிக்­காது அவர்­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்­கு­மாறு வலி­யு­றுத்­தாது முஸ்லிம் கவுன்ஸில் பொலிஸ் மா அதி­ப­ரிடம் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக முறை­யிட்­டுள்­ளது. 

முஸ்லிம் கவுன்­ஸிலின் கடமை முஸ்­லிம்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தா­கவும் முஸ்­லிம்­களின் தவ­று­களைக் கண்­டிப்­ப­தா­கவும் இருக்க வேண்டும்.

அதை­வி­டுத்து தொடர்ந்து பௌத்த அமைப்­பு­களைக் கண்­டிப்­ப­தாக இருக்கக் கூடாது. ஞான­சார தேரர் மஹி­யங்­க­னையில் தனது உரையில் பொலிஸார் தக்க நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளாது விடின் மஹி­யங்­க­னையில் அளுத்­கமை போன்ற கல­வ­ரங்கள் உரு­வா­கலாம் என்றே கூறி­யுள்ளார்.

இதில் என்ன தவறு இருக்­கி­றது? இன வாதம் இருக்­கி­றது? 

முஸ்லிம் கவுன்­ஸிலின் நட­வ­டிக்­கைகள் நாட்டில் இன முறு­கல்­களைத் தோற்­று­விப்­ப­ன­வா­கவே அமைந்­துள்­ளன. பௌத்­தர்­களை இன­வா­தி­க­ளாகச் சித்­த­ரித்து அரபு நாடு­களில் பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இது பௌத்­தர்­களின் மனதைப் புண்­ப­டுத்தும் செய­லாகும்.

நாம் இன­வா­திகள்  என்றால் எம்­முடன் பேச்சுவார்த்தை நடாத்தி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும். 

நாம் முஸ்லிம் அடிப்படைவாதத்தையே எதிர்க்கிறோம். ஏனைய முஸ்லிம்களுடன் நல்லுறவையே பேணி வருகின்றோம் என்றார். 

By

Related Post