மனித கடத்தல் வியாபாரத்துக்கு எதிராக முறையிடுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பிரிவுக்கு கடந்த இரண்டரை மாதங்களில் 15 முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே எதிர்காலத்தில் மனித கடத்தல் வியாபாரத்தை முற்றாக கட்டுப்படுத்த முடியுமான நடவடிக்கை எடுப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மனித வியாபாரத்துக்கு எதிராக முறையிடுவதற்காக விசேட பிரிவொன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த விசேட பிரிவு ஆரம்பிக்கப்பட்டதுமுதல் இதுவரை 15 முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த முறைப்பாடுகள் தொடர்பான விடயங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அதனூடாக விசாரணைகள் இடம்பெறும்.
அதன் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அத னூடாக சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட் டம் நிலைநாட்டப்படும். இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளில் சுற்றுலா விசா மூலம் தொழிலுக்கு சென்றமை தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதிலும் ஓமான் நாட்டில் இருந்தே அதிக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விசேட பிரிவினூடாக மனித கடத்தல்களை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முடியுமாகியுள்ளது. அத்துடன் இதுதொடர்பாக எந்த தகவல்களையும் வழங்குவதற்கும் மற் றும் தேவையான தகவல்களை பெற் றுக்கொள்வதற்கும் 0112884707 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறி விக்குமாறு அமைச்சர் பொதுமக்களை வேண்டிக்கொள்கிறார்.