இனிவரும் காலங்களில் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வீடுகள் மற்றும் கட்டிடங்களைஅமைக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய அனுமதி கட்டாயம் பெறப்படவேண்டும் என்றுகொள்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இயற்கை அனர்த்தங்களின்போது அதிக பாதிப்புக்கான ஏதுக்களை குறைக்கும் நோக்கிலேயேஇந்த கொள்கை அமுல்செய்யப்படவுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தற்போதைக்கு 10 மாவட்டங்களில் இந்த நடைமுறை செயற்படுத்தப்படவுள்ளது.
எனினும் அதனை நாடளாவிய ரீதியில் செயற்படுத்தவும் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.
நாடாளாவிய ரீதியில் தற்போது வருடம் ஒன்றுக்கு ஒருலட்சம் வீடுகள் வரை தேசிய கட்டிl ஆராய்ச்சி நிலையத்தின் அனுமதியில்லாமல் அமைக்கப்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.