களுத்துறைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்த திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி இராஜங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, அங்கு அவருடன் செல்பி எடுத்துகொண்டார்.
மத்துகம, மீகஹாதென்ன கனிஷ்ட வித்தியாலயத்துக்குள் பெற்றோர் சிலருடன், அத்துமீறி நுழைந்து 10 மாணவர்களை பாடசாலையில் இணைத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்காக, அவர், செவ்வாய்க்கிழமை மாலை சென்றிருந்த போது, கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த பாலித, சரணடைவதற்குச் சென்றிருந்த போதே கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும உள்ளிட்ட நால்வரையும், எதிர்வரும் 7ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு, மத்துகம நீதிமன்ற நீதவான், செவ்வாய்க்கிழமை மாலை உத்தரவிட்டிருந்தார்.