நேற்று (08) பிற்பகல் பாணந்துறை நகரசபை விளையாட்டரங்கில் இடம்பெற்ற ஸ்ரீ ராமான்ய மகா நிக்காயாவின் முக்கிய சமய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எமது நாட்டின் சுதந்திரத்துக்கும் ஆட்புல எல்லை ஒருமைப்பாட்டுக்கும் சவாலாக அமையும் வகையில் அமையும் எந்தவொரு தேசிய அல்லது சர்வதேச நடவடிக்கைக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்த ஜனாதிபதி, தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக பின்நிற்கப் போவதில்லை என மகா சங்கத்தினர் முன்னிலையில் உறுதியளித்தார்.
அரசிய யாப்பில் பௌத்த சமயத்திற்கு உரிய இடத்தை மேலும் பலப்படுத்துவதற்கும் வளப்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மகா சங்கத்தினர் முன்னிலையில் உறுதியளித்தார். தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட நாட்டின் எல்லா நடவடிக்கைகளிலும் மகா சங்கத்தினரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் செயற்படுவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஒரு பௌத்தர் என்ற வகையிலும் அரச தலைவர் என்ற வகையிலும் நாட்டின் கீர்த்திமிகு வரலாற்றிற்கு மதிப்பளித்து இலங்கைச் சமூகத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.