Breaking
Sat. Sep 21st, 2024

பிணைமுறி மோசடி குறித்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் (கோப்குழு) பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவானது தனது விசாரணை நடவடிக்கைகளுக்காக மீண்டும்  நாளை கூடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்திநெத்தி

தேசிய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் பதவிகாலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய பிணைமுறி விற்பனை மோசடி குறித்து கோப் குழுவில் அங்கம் பெறும் எமது குழுவினர் மும்முரமான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் பிணைமுறி மோசடி குறித்து விசாரணைக்காக நாம் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற கட்டிட தொகுதியில் கூடி விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.

கோப் குழுவின் தலைவர் என்ற ரீதியில் என்னுடைய தலைமையில் இடம்பெற்ற இந்த விசாரணை நடவடிக்கைகாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் உட்பட தற்போதைய ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இருந்தபோதும் விசாரணை நடவடிக்கைகளுக்கு அர்ஜுன மகேந்திரன் வருகை தராமையின் காரணமாக ஒரு சில தகவல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு முடியாமல் போனது.

இவ்வாரான நிலையிலேயே இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெப்பதற்கு நாளை தினம் எமது குழுவானது மீண்டும் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் கூடவுள்ளது. அந்தவகையில் இவ்விசாரணை நடவடிக்கைகளுக்காக மத்திய வங்கி ஆளுனர் உட்பட அதன் பணிப்பாளர் சபை உட்பட முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் ஆகியோருக்கு நாம் மீண்டும் நாளை மறுதினம் அழைப்பு விடுத்துள்ளோம்.

இதன் போது தற்போது மத்திய வங்கியில் நிலவும் பிரச்சினைகள் உட்பட பிணைமுறி விற்பனை தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க எதிர்ப்பார்க்கின்றோம். என்றார். vk

By

Related Post