நாட்டைச்சூழவுள்ள பிரதேசங்களில் இன்று(12) கடும் காற்றுடன் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு அதிகமாக காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மலையகப் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதுடன் மணிக்கு 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் காற்றின் தாழமுக்கம் நாளையுடன்(13) குறைவடையலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் சிறியளவில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக ஊவா மாகாணங்களில் பிற்பகல் 02 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.