-Mohamed Nizous –
தூய இஸ்லாத்தை
துணிவோடு சொல்லுகின்ற
நாயக்கை எதிர்ப்பவர்கள்
நான்கு வகை மனிதர்கள்
தீயாக இயங்குகிறார்
திருட்டுத் தனம் புரிகின்றார்
சாயங்கள் வெளுக்கும் நாள்
சதியெல்லாம் வெளியில் வரும்.
மார்க்கம் வளர்கிறது
மனிதரின் பேச்சினாலே
மூர்க்கம் கொண்டெழுந்த
மோடி போன்ற மாற்றார்கள்
தீர்க்க முனைகின்றார்
தீனின் வளர்ச்சியினை
யார்க்கும் முடியுமோ
இறைவழியை அழிப்பதற்கு.
கலிமாவைச் சொன்ன பின்னும்
காரிருளில் இருப்பவர்கள்
மலிவான விலைகளுக்கு
மார்க்கத்தை விற்பவர்கள்
இழிவான செயல்களினை
இம்மனிதர் எதிர்ப்பதினால்
பழிவாங்க முனைகின்றார்
பண்பாடு மறக்கின்றார்
நேர் வழி எதுவென்று
நிச்சயமாய்த் தெரிந்தோரும்
தீராத பகை கொண்டு
தினமும் எதிர்க்கின்றார்
சார்ந்துள்ள இயக்க வெறி
ஸாகீரை எதிர்ப்பதற்கு
காரணமாய் ஆனதென்று
கடைசிவரை சொல்லமாட்டார்.
திறன் காட்டி சமூகத்தில்
தெரியவர வாய்ப்பில்லார்
முரண் பட்டு அதனாலே
முன்னேற முனைகின்றார்
பெரு மதிப்பாய் இருப்பவரை
பிரச்சினையாய் விமர்சித்து
முரண்பாட்டு பிரபலத்துக்கு
முனைகிறார் சில நபர்கள்.
கருத்திலே சர்ச்சை எனில்
கருத்தால் எதிர்த்து நிற்போம்
ஒருத்தருக்கு துயரென்றால்
உள்ள முரண் நாம் மறந்து
பொருத்தமான முடிவெடுப்போம்
பொருதுவோரை சிதறடிப்போம்