துருக்கியில் அந்நாட்டு அரசைக் கவிழ்க்க இராணுவத்தின் ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட புரட்சி நடவடிக்கை தோல்வி கண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பல இடங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இருந்தும் ஆங்காங்கே மக்கள் எதிர்ப்புக் கோசங்களும் இடம்பெற்று வரும் நிலையில் புரட்சிக்கு முயன்றவர்கள் அதற்கான விளைவை அனுபவிப்பார்கள் என பிரதமர் ரெசெப் தையிப் எர்டோகன் எச்சரித்துள்ளார்.
எனினும், முக்கிய இராணுவ தளபதிகள் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாகவும், நாடு தமது கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் குறித்த இராணுவ குழுவினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.