இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க மியான்மாரின் 969 அமைப்பு பொது பல சேனாவுடன் கைகோர்த்து செயற்படப் போகிறது அதன் நிறுவுநர் அஸின் விராது தேரர் நேற்றுக் கொழும்பில் வைத்து பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
விராது தேரரின் வருகையே முஸ்லிம் மக்களின் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் இந்த பகிரங்க அறிவிப்பு முஸ்லிம்களின் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் மேலும் கிளப்பிவிட்டுள்ளது. உள்நாட்டு அமைப்பான பொதுபல சேனா அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் இலங்கையர் அனைவருக்கும் அச்சத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சர்வதேச ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் சர்ச்சைக்குரிய 969 அமைப்புடன் கைகோர்த்துள்ளது.இவர்களின் கூட்டு, எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையப்போகிறது என முஸ்லிம்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.