Breaking
Mon. Dec 23rd, 2024

அரச நிறுவனங்கள் துறை அமைச்சர் கபீர் ஹாசிம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் வர்த்தகப்பிரிவு ஆசனத்தில் அமராது பயணிகளுடன் சாதாரண ஆசனத்தில் இருந்து பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இந்தியாவுக்கு சென்ற அவரை வர்த்தக பிரிவு ஆசனத்தில் அமர்ந்து செல்லுமாறுகோரப்பட்டபோதும் வரிசெலுத்துவோரின் பணத்தில் தாம் பயணம் செய்யவிரும்பவில்லை என்று கூறி அதற்கு மறுப்புத்தெரிவித்துவிட்டார்.

கபீர் ஹாசிமின் அமைச்சின் கீழேயே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸூம் உள்ளடங்குகிறது. இந்தநிலையில் அவரும் மனைவியும் சாதாரண இருக்கையிலேயே அமர்ந்து பயணம் செய்துள்ளனர்.

அமைச்சரின் இந்த நடவடிக்கை, அவரின் அமைச்சரவை சகாக்களுக்கும் அமைச்சின் பணிப்பாளர்களுக்கும் பாடமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post